5000 முதலீடு | வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் வேலை | 35000 லாபம் | அருமையான சுயதொழில்...!


Flower Export Business in Tamil...!
பூக்கள் ஏற்றுமதி தொழில்: ஒரு விரிவான பார்வை

வணக்கம் நண்பர்களே!

இன்று நாம் பூக்கள் ஏற்றுமதி தொழில் (Flower Export Business) பற்றி விரிவாக பார்க்க போகிறோம். இந்தியா மலர்களுக்கு புகழ்பெற்ற நாடு. இங்கிருந்து உலகம் முழுவதும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலை தொடங்குவதன் மூலம் மிக குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட முடியும். 

முதலீடு:

  • மிக குறைந்த முதலீட்டில் (₹5,000) தொடங்க முடியும்.

பயிற்சி:

  • சரியான பேக்கிங் முறை மட்டுமே கற்றுக்கொள்ள வேண்டும்.
  • இதனை யூடியூப் வீடியோ மூலம் செய்து பார்த்து ஒரு நாள் முதல் ஒரு வாரத்திற்குள் கற்றுக் கொள்ள முடியும். 

தேவைப்படும் ஆவணம்:

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் என்றாலே IE Code License கட்டாயம் எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் Gst registration செய்து கொள்ளலாம். 

பேக்கிங் முறை:

உதாரணத்திற்கு 10 கிலோ மல்லிகை பூவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதனை பேக்கிங் செய்யும்பொழுது ஐஸ் கட்டிகளை வடித்து தான் பேக்கிங் செய்வோம் ஆக அதன் எடை கிட்ட தட்ட 13 கிலோ முதல் 15 கிலோ வரை Gross Weight வரும்.

பேக்கிங் செய்யும் பொழுது Shelf Life 24 மணி நேரத்திற்கு பிறகு மலர்கள் நன்றாக இருக்கும். அதுவே சாதாரண ஐஸ் கட்டிகளை போன்று பேக்கிங் செய்யும்பொழுது 24 மணி நேரம் பாதுகாப்பாக இருக்கும். அதேபோல் Ice Gel பேக் என்றால் 36 மணி நேரம் வரை மலர்கள் பாதுகாப்பாக. இருக்கும்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

  • ஐஸ் கட்டிகள், தெர்மாகோல், Ziplock Cover, மொட்டுகளாக இருக்கும் மலர்கள்.

வருமானம்:

பொதுவாக Flower Export Price எவ்வளவு இருக்கும் என்றால் ஒரு கிளி சுமார் 10 டாலர் வரை இருக்கும். உதாரணத்திற்கு நாம் சிங்கப்பூரை டாலருக்கு பார்த்தால் கிட்டத்தட்ட 600 ரூபாய் வரை இருக்கு. அதிலும் மல்லிகை பூ சீசன் குறைவாக இருக்கும்பொழுது இன்னும் அதன் விலை அதிகமாக இருக்கும்.

  • ஒரு கிலோ மல்லிகை பூ: ₹400 (சீசன் குறைவாக இருக்கும்போது விலை அதிகமாக இருக்கும்)
  • வாரத்திற்கு 10 கிலோ மல்லிகை பூ என கணக்கு வைத்தால் குறைந்தபட்சம்  ₹35,000 வரை லாபம் ஈட்ட முடியும். 

ஆர்டர் பெறுவது எப்படி:

வெளிநாடுகளிலும் பூக்கள் விற்பதற்கென்று ஸ்டோர் இருக்கும். ஆக அந்த ஷாப்பை பற்றிய விவரங்களை முதலில் கலைக்ட் செய்ய வேண்டும். பின் அவர்களது காண்டைக்ட் பேஜில் இருக்கும் வெளிநாட்டு பூக்கடைகளின் ஈமெயில் ஐடிக்கு மெயில் அனுப்புவதன் மூலம் ஆர்டர் பிடித்து கொள்ளலாம். 

பிற தகவல்கள்:

  • மலர்களின் வகை, சீசன், தேவை போன்றவை விலையை நிர்ணயிக்கும்.
  • விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • போட்டி அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும்.
  • நல்ல லாபம் ஈட்டக்கூடிய தொழில்.

குறிப்பு:

  • மேலும் தகவல்களுக்கு, ஏற்றுமதி நிறுவனங்கள், வேளாண்மை துறை, அரசு திட்டங்கள் போன்றவற்றை அணுகவும்.

சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை பெற எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பார்வையிடவும்.


Post a Comment

0 Comments