Swayam.gov.in | Government free training Courses | Msne Chennai | msme tamil

Government free training courses | Swayam.gov.in | Government of India free education Schemes in Tamil


வணக்கம் நண்பர்களே! 
மத்திய அரசின்  Ministry of Education, Government of India மூலம் துவங்கபட்ட திட்டம் Swayam என்பதாகும். இந்த Swayam மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. அவை, 
1. Access
2. Equity
3. Quality
இத்திட்டத்தின் மூலம் பின்தங்கியவர்கள் உட்பட அனைவருக்கும் சமமான, தரமான சிறந்த கற்பித்தல் மற்றும் அதற்கான வளங்களை தருவதாகும். இதன் மூலம் ஒன்பதாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை வகுப்பறையில் கற்பதை போல கற்க ஏதுவாக உள்ளது. இது நம் நாட்டில் உள்ள சிறந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட படத்தொகுப்பு இதன் மூலம் எவரும் எந்தவொரு நேரத்திலும் சிறப்பான கல்வியை எந்தவொரு இடத்தில் இருந்தும் பெற முடியும்.

பயிற்சி சான்றிதழ்:

Swayam பயிற்சி முற்றிலும் இலவசம். ஆனால் அதற்கான சான்றிதழ் பெற வேண்டும் என நினைப்பவர்கள் அவர்களிடம் விண்ணப்பித்து கட்டண தேர்வுகளின் அடிப்படையில் அவர்கள் தேர்வு நடத்தும் தேர்வு எழுதி அவர்களின் தகுதி கோல்களை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். 

பயிற்சி தலைப்புகள்:

1. Teaching
2. Entrepreneurship
3. Agriculture
4. Math and science
5. Engineering and Technology
6. Business administration
7. Computer application
8. Banking and insurance
9. Commerce
10. Finance
11. Taxation
12. Production and Operation
என பல தலைப்புகளின் கீழ் பயிற்சிகள் உள்ளன. 


பயிற்சி காலம்:

குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் முதல் அதிகபட்சமாக இருபத்தி நான்கு வாரங்கள் வரை பயிற்சி நடைபெறும். 

முக்கிய பயிற்சிகள் சில:

1. Animations
2. Academic Writing
3. Academic and Research Report Writing
4. Access to Justice
5. Accreditation for diploma engineering programs
6. Accreditation for undergraduate engineering program
7. Administration and public policy
8. Administrative law
9. Advanced c++
10. Advanced Corporate Strategy
11. Android mobile application Development
12. Awareness program on solar water pumping System
13. Awareness program on bio safety
14. Basic of arabic
15. Communication skills
16. Finacial accounting
17. Business organization and management
18. Principles of marketing
19. Computer application in business
20. E commerce
21. Basic of event management
22. Event planning
மேலும் பல பயிற்சிகள் உள்ளது. 

வலைத்தளம்:
Swayam இதனை கிளிக் செய்யுங்கள் அதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசு வலைத்தளத்தை நேரடியாக அணுக முடியும். 

இதன் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள்:

சிறந்த தரமான உள்ளடக்கம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஒன்பது தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவை சுய-வேக மற்றும் சர்வதேச படிப்புகளுக்கான AICTE ஆகும். NPTEL பொறியியல், தொழில்நுட்ப முதுகலை கல்விக்கு UGC, இளங்கலை கல்விக்கு CEC, பள்ளி கல்விக்கு NCERT & NIOS, பள்ளி மாணவர்களுக்கு IGNOU, மேலாண்மை படிப்புக்கான IIMB மற்றும் ஆசிரியர் பயிற்சி திட்டத்திற்கு NITTTR வும் இதில் அடங்கும். 

• இதில் 203 கூட்டாளி நிறுவனங்கள் உள்ளது. 
• 18470424+ மாணவர்கள் சேர்க்கை இதுவரை உள்ளது. 
• மொத்த மாணவர்கள் சேர்க்கையில் 1186772 தேர்வு பதிவுகளும் 118263 பயிற்சி சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. 

இது போன்ற பல தகவல்களை அறிய நம் யூடியூப் சேனல் மற்றும் வலைத்தளத்தை பின் தொடருங்கள். 

Post a Comment

0 Comments